
புதிய அத்தியாயம்
பிரபல இசை அமைப்பாளர் ரகு தீக்ஷித், பின்னணி பாடகி வாரிஜாஸ்ரீ காதலில் விழுந்துள்ளனர். சாகு இன்னு சாகு திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றினர். வீடியோ சாங் ஆல்பத்திலும் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். அப்போது ஏற்பட்ட அறிமுகம், காதலாக மாறி, திருமணம் வரை வந்துள்ளது. ரகு தீக்ஷித் ஏற்கனவே பிரபல நடன கலைஞர் மயூரி உபாத்யாவை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து பெற்றனர். இதுகுறித்து, ரகு தீக்ஷித் கூறுகையில்,''என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் துவங்கும் என்பதை, நான் எதிர்பார்க்கவே இல்லை. வாரிஜாஸ்ரீயின் பெற்றோரின் ஆசியுடன், புதிய அத்தியாயத்தை துவங்க, நான் ஆர்வமாக இருக்கிறேன்''” என்றார்.
அழகான கோபம்
நடிகை ராஷ்மிகா மந்தண்ணா, எரிச்சலில் உள்ளார். இவர் கன்னட படங்களில் நடிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வதந்தி பரவியதே அவரது கோபத்துக்கு காரணம். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது,''மக்கள் என்னை பற்றி கற்பனை செய்யும், அனைத்து விஷயங்களும் பொய்யானது. என்னை கன்னட திரையுலகம் தடை செய்யவில்லை. என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது, மற்றவர்களுக்கு தெரியாது. மற்றவரின் அந்தரங்கத்தில், கேமரா வைத்து பார்க்க முடியாது. அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். எங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும், ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள முடியது. வெளியில் இருந்து பார்ப்பது உண்மையாகாது''” என, பொரிந்து தள்ளுகிறார்.
நம்பிக்கை வந்தால்...
நடிகை நிவேதிதா கவுடா, கணவர் சந்தன் ஷெட்டியை விவாகரத்து செய்த பின்னும், எந்த வருத்தமும் இல்லாமல், நடிப்பு, சுற்றுலா செல்வது, ரீல்ஸ் செய்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவது, வெளிநாட்டு சுற்றுலா என பிசியாகவே இருக்கிறார். இவர் இரண்டாவது திருமணத்துக்கு தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அவர் கூறுகையில்,''வருங்காலத்தில் என்னை முழுமையாக புரிந்து கொள்ளும் ஆண் கிடைத்தால், திருமணம் செய்து கொள்வேன். திருமணம் என்றால் பயமாக இருக்கிறது. என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற, நம்பிக்கை ஏற்பட்டால் திருமணம் செய்து கொள்வேன்''” என்றார்.
விரைவில் டும்... டும்...
முதன் முறை
கிருஷ்ணம் பிரணயம் திரைப்பட வெற்றிக்கு பின், நடிகர் கணேஷ், இயக்குநர் ராஜு சீனிவாஸ் கூட்டணியில், மற்றொரு படம் தயாராகிறது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தின் மூலம் மாளவிகா ஷர்மா, கன்னடத்துக்கு வருகை தருகிறார். இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'படத்தில் இண்டு நாயகியர். ஏற்கனவே தேவிகா பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியாக மாளவிகா ஷர்மா, தமிழ், தெலுங்கில் நடித்தவர். இப்போது முதன் முறையாக கன்னடத்துக்கு வந்துள்ளார். மைசூரு, வட மாநிலங்கள், பூடானில் படப்பிடிப்பு நடக்கும். இதுவரை ரொமான்ஸ் ஹீரோவாக இருந்த கணேஷ், இந்த படத்தில் விவசாயம், இசை, இயற்கையுடன் தொடர்புள்ள வேடத்தில் நடிக்கிறார்' என்றனர்.
ரிலீஸ் தள்ளிவைப்பு
எஸ்.தாராயண் இயக்கி, துனியா விஜய் நடித்த, 'மாருதா' திரைப்படம் அக்டோபர் 31ல் திரைக்கு வரும் என, கூறப்பட்டது. ஆனால் நவம்பர் 21க்கு தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து, இயக்குநர் கூறுகையில், “சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை கொண்டதாகும். சமூக வலைதளங்கள் எவ்வளவு ஆக்கப்பூர்வமானதோ, அதே அளவுக்கு அபாயமானது. தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கவனிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் படம். தற்போது திரையர ங்குகள் பற்றாக்குறை உள்ளதால், ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளோம்,” என்றார்.