sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : நவ 01, 2025 11:13 PM

Google News

ADDED : நவ 01, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிக வழி

பிரபல தெலுங்குப்பட இயக்குநர் பிரசாந்த் வர்மா, ஹனுமான் திரைப்படத்துக்கு பின், தற்போது மஹாகாளி என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் கன்னட நடிகை பூமி ஷெட்டி நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர். காளி அவதாரத்தில் தோன்றும் இவரது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவரது காளி அவதார போஸ்டர் சமூக வலை தளத்தில் பரவியுள்ளது. காளி தெய்வத்தை பற்றிய படமாகும்.

அரசியல்வாதி 'கெட்அப்'

நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில், இரண்டு புதிய திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. மற்றொரு படத்துக்கு, கும்மடி நரசய்யா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் அவர் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார். ஆந்திராவை சேர்ந்த அரசியல்வாதி கும்மடி நரசய்யாவின் வாழ்க்கை வரலாற்றை, படமாக்குகின்றனர். சிவராஜ்குமாரின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பல திரைப்படங்களில் நடித்துள்ள பரமேஸ்வர் ஹிவ்ரலே, இந்த படத்தை இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும். இதற்கிடையே சிவராஜ்குமாரின் 135வது படத்தை, ஹரி ஜெயண்ணா இயக்குகிறாராம்.

ஆட்டோ துாதர்

நடிகை ரசிதா ராம் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் துாதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன், நுாற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள், குறிப்பாக பெண் ஓட்டுநர்கள், பெங்களூரின், ஆர்.ஆர்.நகரில் உள்ள ரசிதா ராமின் வீட்டுக்கு சென்றனர். அவரை ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் துாதராக தேர்வு செய்யப்பட்டதை கூறினர். அப்போது ரசிதா ராம், செருப்பை கழற்றிவிட்டு, காக்கி சட்டை அணிந்து ஆட்டோவை வணங்கி, ஏறி அமர்ந்தார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

டிசம்பரில் வெளியீடு

தனுஷ் சிவண்ணா நாயகனாக நடித்துள்ள, பாஸ் திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. பெங்களூரில் ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். வரும் டிசம்பரில் திரையிட படக்குழுவினர் ஏற்பாடு செய்கின்றனர். இன்னும் சில நாட்களில், டீசர் வெளியிடவுள்ளனர். இது தனுஷ் சிவண்ணா நாயகனாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். இவரை படத்தில் அனைவரும், 'பாஸ்' என அழைப்பதால், அதே பெயரை படத்துக்கு சூட்டியுள்ளனர். இவருக்கு ஜோடியாக மோனிகா கவுடா நடித்துள்ளார். கிரைம், திரில்லர் கதை கொண்டதாகும்.

உபேந்திராவின் ஆசி

நடிகர் உபேந்திராவுடன், சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி கவுடா, முதன் முறையாக ஐ ஆம் காட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகனும் இவரே. இது நவம்பர் 7ல், திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் உபேந்திரா பட டிரெய்லர் வெளியிட்டு, தன் சீடரை வாழ்த்தினார். சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த காதல் கதை கொண்டது. ரவிகவுடா உபேந்திராவிடம் பயிற்சி பெற்றவர் என்பதால், படத்தில் இவரது சாயல் தென்படுகிறது.

பொங்கும் பாத்திரம்

சில திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் யோகி, தற்போது வர்ணா என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவருக்கு ஜோடியாக பவ்யா கவுடா நடிக்கிறார். தவறை கண்டு சகித்துக் கொள்ளாத, தவறு செய்தவர்களை தட்டிக் கேட்கும் வீரமான கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் அர்ஜுன் யோகி நடிக்கிறார். பெரும்பாலும் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அழகான கிராமத்து கதையை படமாக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us