கர்நாடகாவின் வட மாவட்டங்களில் குளிர்காற்று வீசும்
கர்நாடகாவின் வட மாவட்டங்களில் குளிர்காற்று வீசும்
ADDED : ஜன 11, 2026 05:48 AM
பெங்களூரு: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கர்நாடகாவின் வடமாவட்டங்களில் கடும் குளிர் காற்று வீசும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில், குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட மூன்று முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வரை குறையலாம். பல இடங்களில் மேக மூட்டம் நிலவும். விஜயபுராவில் கடுமையான குளிர் காற்று வீசுகிறது.
இதற்கிடையே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதி மற்றும் இலங்கையின் தென்கிழக்கு கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, கர்நாடகாவில் வானிலையில் மாற்றம் தென்படுகிறது.
இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலத்தால், கர்நாடகாவின் வடக்கு பகுதிகளில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அடுத்த சில நாட்களுக்கு குளிர் நீடிக்கும். துமகூரு, சிக்கமகளூரு, கோலார், பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், ராம்நகர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
