தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவிக்கு ஹால் டிக்கெட் தராமல் அலைய வைத்த கல்லுாரி நிர்வாகம்

 மாணவிக்கு ஹால் டிக்கெட் தராமல் அலைய வைத்த கல்லுாரி நிர்வாகம்

 மாணவிக்கு ஹால் டிக்கெட் தராமல் அலைய வைத்த கல்லுாரி நிர்வாகம்


ADDED : மார் 01, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாவேரி: கட்டணம் செலுத்தவில்லை என்பதால், பி.யு.சி., தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொடுக்காமல், மாணவியை கல்லுாரி நிர்வாகம் அலைய வைத்தது.

ஹாவேரி மாவட்டம், ராணி பென்னுார் தாலுகாவில் உள்ள, பி.ஏ.ஜே.எஸ்.எஸ்., கல்லுாரியில், சாரா ஜெஸ்ஸிகா, 18, என்ற மாணவி இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படிக்கிறார். நேற்று இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு துவங்கியது. அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்கனவே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

சாரா ஜெஸ்ஸிகா, 30,000 ரூபாய் கட்டணம் செலுத்தாத காரணத்தால், அவருக்கு கல்லுாரி நிர்வாகம் ஹால் டிக்கெட் கொடுக்கவில்லை. பல முறை மன்றாடியும் கருணை காட்டவில்லை. ஹால் டிக்கெட் இல்லை என்றாலும், மாணவி நேற்று காலை கன்னட தேர்வு எழுத கல்லுாரிக்கு வந்தார். ஆனால், ஆசிரியை சுனிதா, மாணவியை உள்ளே அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, கல்லுாரியில் இலவசமாக கல்வி கற்பிப்பார்களா என்று கேட்டும் அவமதித்தார்.

மாணவி ஹால் டிக்கெட் கிடைக்காமல், அலை பாய்ந்தார். இதையறிந்த சமூக ஆர்வலர் ஹனுமந்தப்பா, கல்லுாரிக்கு வந்து மாணவிக்கு ஹால் டிக்கெட் கொடுக்கும்படி வலியுறுத்தினார். மாணவியின் எதிர்காலத்தை பாழாக்காதீர்கள் என்று கண்டித்தார். அப்போதும் முரண்டு பிடித்த கல்லுாரி நிர்வாகம், மாணவியின் இருசக்கர வாகனத்தை பிணையாக வைத்து கொண்டு, ஹால் டிக்கெட் கொடுத்தது.

இதுகுறித்து, கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரியும் கல்லுாரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்பதாக கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us