/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு தங்கும் விடுதியில் கல்லுாரி மாணவி தற்கொலை
/
பெங்களூரு தங்கும் விடுதியில் கல்லுாரி மாணவி தற்கொலை
பெங்களூரு தங்கும் விடுதியில் கல்லுாரி மாணவி தற்கொலை
பெங்களூரு தங்கும் விடுதியில் கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : டிச 01, 2025 05:05 AM
ஹெசரகட்டா: பெங்களூரில் தங்கும் விடுதியில் கல்லுாரி மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹாசனை சேர்ந்தவர் ஸ்ரீவத்சலா, 19. பெங்களூரில் கல்லுாரி ஒன்றில் பி.பார்ம்., இறுதி ஆண்டு படித்து வந்தார். ஹெசரகட்டாவில் உள்ள பி.ஜி., எனும் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு அறைக்கு வந்த மற்றொரு மாணவி, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பி.ஜி., உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அவரும், சோழதேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த அவர்கள், உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தங்கியிருந்த அறையில் ஆய்வு செய்தபோது, தனது தந்தைக்கு எட்டு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், 'உங்கள் அன்புக்கு நான் தகுதியானவள் இல்லை அப்பா.
நீங்கள் எனக்கு கொடுத்த அன்பு வேறு யாராலும் கொடுக்க முடியாது. நான் கேட்ட அனைத்தையும் கொடுத்தீர்கள்.
'உங்கள் மானத்தை காப்பாற்ற நான் எதுவும் செய்யவில்லை. உங்கள் அன்பை காப்பாற்ற எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. நான் நேசித்த வாலிபரை கூட ஏமாற்ற விரும்பவில்லை. நான் மரணத்திடம் சரணடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

