sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழா: பரிசு பெறும் நுால்கள் அறிவிப்பு

/

 பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழா: பரிசு பெறும் நுால்கள் அறிவிப்பு

 பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழா: பரிசு பெறும் நுால்கள் அறிவிப்பு

 பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழா: பரிசு பெறும் நுால்கள் அறிவிப்பு


ADDED : டிச 01, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக தமிழ் பத்திரிகை யாளர் சங்கத்தின் நான்காவது தமிழ் புத்தக திருவிழாவில், கர்நாடக தமிழ் சிறந்த நுால்கள் பரிசு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் நான்காவது தமிழ் புத்தக திருவிழா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் வரும் 5ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடக்கிறது.

கர்நாடகா மற்றும் கர்நா டகா அல்லாத தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ் நுால் போட்டியில், தேர்வுக்குழுவினர் புலவர் கார்த்தியாயினி, பேராசிரியர் சரஸ்வதி, சிவகனி ஆகியோர் சிறந்த படைப்புகளை தேர் வு செய்துள்ளனர்.

தேர்வான நுால்கள் முதல் பரிசு 5,000 ரூபாய் - கவிஞர் கே.ஜி.ராஜேந்திரபாபுவின் 'முத்தொள்ளாயிர மோகனம்';

இரண்டாவது பரிசு 4,000 ரூபாய் - சென்னை மணிமேகலை பிரசுரம் பேராசிரியர் முனைவர் கணேசின் 'தமிழ் கவிஞர்களின் முக்கியமான சமுதாய சிந்தனைகள்';

மூன்றாவது பரிசு 3,000 ரூபாய் - சென்னை ஆர்.என்.ஆர்., பிரிண்டர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ் சந்திரசேகர், தமிழ்செல்வியின் 'நின்றசீர் நெடுமால் பெருமை' தேர்வாகி உள்ளன.

தங்கவயல் வரலாறு சிறப்பு பரி சு தலா 2,000 ரூபாய் - ஐந்து பேருக்கு - கோலார் தங்கவயல் எலுஷன் எலக்ட்ரானிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் சீத்தாராமனின் 'கோலார் தங்கவயல் வரலாறு'; சென்னை மணிவாசகம் பதிப்பகம் சரோஜா கிருஷ்ணமூர்த்தியின் 'பயணத்தில் பல்லாண்டு'; சென்னை நுாலேணி பதிப்பகம் தேன்மொழியனின் 'மூன்றாம் மழைத்துளி'; சென்னை மணிவாசகர் பதிப்பகம் பேராசிரியர் கோவிந்தராஜனின் 'சர்வக்ஞர் வெண்பா ஒரு பன்முக பார்வை'; நெருப்பலையார் மரபுப் பாவரசுவின் 'மரபுப்பா மெய்யாண்டி மேளதாளம்' ஆகிய நுால்கள்.

கர்நாடகா அல்லாத பிற மாநில தமிழ் நுால்கள்: முதல் பரிசு 5,000 ரூபாய் - ஓசூர் அறம் பதிப்பகம் அறம் கிருஷ்ணனின் 'ராஜேந்திரசோழனின் கங்கையும் கடாரமும் தரைவழிப் போரும் கடற்வழி போரும் கடார வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு';

இரண்டாம் பரிசு 4,000 ரூபாய் - சென்னை சுவாசம் பதிப்பகம் விதுஷின் ஆபரேஷன் சிந்துார்';

மூன்றாம் பரிசு 3,000 ரூபாய் - சென்னை சுவாசம் பதிப்பகம் உத்ரா துரைராஜனின் 'இந்திய அறிவியல் அறிஞர்கள்';

சிறப்பு பரிசு தலா 2,000 ரூபாய் - நான்கு பேருக்கு - திருப்புவனம் செல்வலட்சுமி பதிப்பகம் ஞானபாண்டிதனின் 'பெண்மையின் தனல்'; புதுடில்லி பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம் பேராசிரியர் முனைவர் சீனிவாசனின் 'ஜாதி வன்மக்கொலைகளும் அருந்ததியர் குலசாமிகளும்';

சேலம் மகிழம் தமிழ்சங்கம் வில்வநாதனின் 'தமிழும் வாழ்வியலும்: பாரம்பரிய சித்த மருத்துவம்'; சென்னை மணிவாசகர் பதிப்பகம் மதுரை பாபாராஜின் 'திருக்குறள் சிறுவர் பாடல்கள்' ஆகிய நுால்கள். இவர்களுக்கு வரும் 6ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடக்கும் விழாவில், பரிசு தொகை வழங்கப்படுகிறது.

ஏராளம்... ஏராளம்!

நான்காவது தமிழ் புத்தக திருவிழாவில், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் அரங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் இடம் பெறும் புத்தகங்கள் பட்டியலில் முக்கி யமான புத்தகங்கள்: அந்துமணியின் 'அந்துமணியுடனான எங்கள் பயணம், ஐந்து நாடுகளில் அந்துமணி, ஆறு நாடுகளில் அந்துமணி, லட்சத்தீவில் அந்துமணி, அமைதிப்படையுடன் அந்துமணி, அமெரிக்காவில் அந்துமணி, அந்துமணியுடனான எங்கள் பயணம், நாயகன்; பார்த்தது கேட்டது படித்தது - பாகம் 1 முதல் பாகம் 23 வரை; நினைவாற்றில் நிரந்தரமா, நிரந்தர தெய்வீக வழிகாட்டல், மஹா பெரியவா - தமிழ், ஆங்கில நுால்கள், போட்டி தேர்வு, இஸ் மெமரி பெர்மனென்ட், நுரையீரல் அறிந்ததும் அறியாததும், திருநெல்வேலி பாரம்பரிய சமையல், சும்மா கிடைத்ததா சுதந்திரம்?, வைரஸ், காசி, தெய்வீக கவிஞர் அன்னமாச்சார்யா, சொல்லச்சொல்ல இனிக்குதடா, இளையோர் மஹாபாரதம், விட்டு விடுதலையாகி, விசாலப் பார்வை, ஆதிகேசவப் பெருமாள் ஆலயம், சுதந்திர போராட்டத்தில் பிராமணர்கள், 10 டாக்டர்கள் 100 கேள்விகள்? மிஸ்சிங் உட்பட ஏராளமான புத்தகங்கள் இடம் பெறு கின்றன.








      Dinamalar
      Follow us