/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருட்டு பட்டத்துக்கு பயந்து கல்லுாரி மாணவி தற்கொலை
/
திருட்டு பட்டத்துக்கு பயந்து கல்லுாரி மாணவி தற்கொலை
திருட்டு பட்டத்துக்கு பயந்து கல்லுாரி மாணவி தற்கொலை
திருட்டு பட்டத்துக்கு பயந்து கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : ஏப் 19, 2025 11:06 PM
ஹாவேரி: ஹாவேரியின் ஷிகாவி தாலுகா சிக்கமல்லுார் கிராமத்தின் ஷில்பா, 22. பெலகாவியில் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்தார். விடுதியில் தங்கி இருந்தார். ஷிகாவி டவுனில் வசிக்கும் நவீன், 25, ஷில்பா இருவரும் காதலித்தனர்.
ரம்ஜான் நடாப் என்பவரின் பர்னிச்சர் கடையில் நவீன் வேலை செய்தார். இந்த கடையில் இருந்து சில பொருட்கள் சமீபகாலமாக திருட்டு போயின.
நவீன் மீது ரம்ஜான் நடாப் சந்தேகம் அடைந்தார். மொபைல் போனையும் பறித்தார். 'வாட்ஸாப்' பில் நவீன், ஷில்பா பேசிய குறுந்தகவல்கள் இருந்தன.
ஷில்பாவின் மொபைல் நம்பரை எடுத்து அவரிடம், ரம்ஜான் நடாப் பேசி உள்ளார். 'உன் காதலன் என் கடையில் இருந்து பொருட்களை திருடி விற்று, உனக்கு பணம் அனுப்பி உள்ளான். இந்த திருட்டில் உனக்கும் தொடர்பு உள்ளது. உனக்கு திருட்டு பட்டம் கட்டுவேன்; உங்கள் காதல் பற்றி பெற்றோரிடம் கூறுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
இதனால் ஷில்பா பயந்தார். கடை உரிமையாளர் மிரட்டுவது பற்றி, காதலனிடம் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பெலகாவியில் தான் தங்கி இருந்த விடுதி அறையில் ஷில்பா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு ரம்ஜான் நடாப் தான் காரணம் என, மார்க்கெட் போலீசில் நவீன் புகார் செய்தார். விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு குறித்து ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தலாலிக் கூறுகையில், ''நவீன் வீட்டில் வறுமை அதிகமாக இருந்தது. அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மருந்து வாங்க கூட பணம் இல்லை. நவீனுக்கு, ரம்ஜான் நடாப் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை.
''இதனால் வேறு வழியின்றி நவீன், கடையில் பொருட்களை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தாய்க்கு மருந்து வாங்கி உள்ளார். அவரது மொபைல் போனை பறித்ததுடன், ஷில்பாவின் நம்பரையும் எடுத்து, ரம்ஜான் நடாப் மிரட்டி உள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

