/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயில் மோதி உயிரிழந்த கல்லுாரி மாணவி
/
ரயில் மோதி உயிரிழந்த கல்லுாரி மாணவி
ADDED : மே 01, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவணகெரே: பல்லாரியை சேர்ந்தவர் ஷ்ராவணி, 23. இவர் மைசூரில் எம்.பி.ஏ., படித்து வந்தார். இவரது உறவினர், தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவில் வசிக்கிறார். இவரது வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க ஷ்ராவணி சென்றிருந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின், ஊருக்கு செல்லும் நோக்கில் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மொபைல் போனில் பேசியபடியே, தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அவ்வழியாக ரயில் வந்தது. ஆனால் மொபைல் போனில் மூழ்கியிருந்ததால், ரயில் வருவதை ஷ்ராவணி கவனிக்கவில்லை. ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

