‘ப்ரீ வெட்டிங் ஷூட்’டால் விபத்து கல்லுாரி மாணவி பரிதாப பலி
‘ப்ரீ வெட்டிங் ஷூட்’டால் விபத்து கல்லுாரி மாணவி பரிதாப பலி
UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 05:14 PM
மைசூரு: மைசூரு அரண்மனை அருகில், பெரிய கடிகாரம் சதுக்கத்தில் நடந்த விபத்தில், மாணவி இறப்புக்கு, ‘ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்’ நடத்தியதே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மைசூரு அரண்மனை அருகில் உள்ள, பெரிய கடிகாரம் சதுக்கம் அருகில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியது. ஸ்கூட்டரில் இருந்த வைஷ்ணவி, 17, பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இவர் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்து வந்தார். இந்த விபத்தில் இவரது தந்தை வெங்கடேஷ் நாயக் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
‘சம்பவம் நடந்த இடத்தில், ஒரே நேரத்தில் 10 முதல் 15 ஜோடிகள், ‘ப்ரீ வெட்டிங் ஷூட்’ நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஓட்டுநரின் கவனம் சிதறியது. ஜோடிகளின் போட்டோ ஷூட்டிங்கை பார்த்தபடியே வந்து, ஸ்கூட்டர் மீது மோதினார்; மாணவியின் இறப்புக்கு காரணமானார்’ என, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், போட்டோ ஷூட் நடத்த தடை விதிக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.
