UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 11:52 PM
அன்னபூரணேஸ்வரி நகர்: கல்லுாரி மாணவரை கொலை செய்த வழக்கில், மூன்று சிறுவர்களுடன், நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு நாகரபாவியை சேர்ந்தவர் யோகேஷ், 19. அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்தார்.
கடந்த 30ம் தேதி கல்லுாரியின் பின்பக்க சாலை பகுதியில், யோகேஷை, மர்மநபர்கள் கத்தியால் குத்தியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். அன்னபூரணேஸ்வரி நகர் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் யோகேஷை கொலை செய்த அவரது வகுப்பு தோழன் புவன், 19 மற்றும் 16 வயது சிறுவர்கள் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
புவன் கல்லுாரியில் படிக்கும் தனது சீனியர் மாணவியை காதலித்துள்ளார். மாணவியிடம் காதலை கூறிய போது, அவர் நிராகரித்து விட்டார். இதுபற்றி யோகேஷிடம் கூறி புவன் வருத்தப்பட்டுள்ளார்.
அப்போது அந்த மாணவியை பற்றி யோகேஷ் ஆபாசமாக பேசியுள்ளார். கோபம் அடைந்த புவன், மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து யோகேஷை கொலை செய்தது விசாரணையில் தெரிந்துள்ளது.
