/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சக நடிகை பாலியல் பலாத்காரம் காமெடி நடிகர் மதேனுார் மனு கைது
/
சக நடிகை பாலியல் பலாத்காரம் காமெடி நடிகர் மதேனுார் மனு கைது
சக நடிகை பாலியல் பலாத்காரம் காமெடி நடிகர் மதேனுார் மனு கைது
சக நடிகை பாலியல் பலாத்காரம் காமெடி நடிகர் மதேனுார் மனு கைது
ADDED : மே 22, 2025 11:16 PM

பெங்களூரு: தன்னுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், காமெடி நடிகர் மதேனுார் மனு கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசில், 33 வயது நடிகை அளித்த புகார்:
நானும், கன்னட காமெடி கில்லாடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மதேனுார் மனுவும் திரைப்படங்களில் வாய்ப்பு தேடி வந்தோம். 2018ல், 'காமெடி கில்லாடிகள்' நிகழ்ச்சியில் எனக்கும், அவருக்கும் அறிமுகம் கிடைத்தது. நாகரபாவியில் அவருக்காக வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தேன்.
காமெடி கில்லாடிகள் ஷோ நடிகர்களுடனான நிகழ்ச்சிக்காக, 2022ல் என்னை ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுராவுக்கு அழைத்து சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும், எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தங்கியிருந்தேன்.
என் அறை கதவை தட்டிய அவர், 'நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான தொகை வழங்க வந்துள்ளேன்' என்று கூறி உள்ளே வந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.
சில நாட்களுக்கு பின், என் வீட்டுக்கு வந்த அவர், என் எதிர்ப்பையும் மீறி, என்னை கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபோன்று பலமுறை நடந்துள்ளது. நான் கர்ப்பமாக இருப்பதை அவரிடம் தெரிவித்த போது, கருவை கலைக்க மாத்திரை கொடுத்தார்.
இது தொடர்பாக யாருக்கும் தெரிவிக்க கூடாது. மீறினால், அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், மதேனுார் மனுவை தேடி வந்தனர்.
இதற்கிடையில், சமூக வலைதளம் மூலம் மதேனுார் மனு வெளியிட்டுள்ள வீடியோ:
நாளை (இன்று) நான் கதாநாயகனாக நடித்த படம் வெளியாகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக இத்திரைப்படத்தின் டிரெய்லர், மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. இதை அறிந்த திரைப்பட துறையில் உள்ள சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர்.
எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் என்பதற்கு என்னிடமும் ஆதாரம் உள்ளது. திரைப்படத்தையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாழாக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
இதற்கிடையில், ஹாசன் மாவட்டம், சாந்திகிராமில் தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.