/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'காமெடி கில்லாடிகளு' கலைஞர் தற்கொலை
/
'காமெடி கில்லாடிகளு' கலைஞர் தற்கொலை
ADDED : ஆக 02, 2025 01:54 AM

உத்தரகன்னடா: 'காமெடி கில்லாடிகளு' புகழ் கலைஞர் சந்திரசேகர் சித்தி தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரகன்னட மாவட்டம், எல்லாபுரா தாலுகாவின் வஜ்ரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சந்திரசேகர் சித்தி, 30. இவர் நீனாசம் பயிற்சி மையத்தில் நாடக பயிற்சி பெற்றவர். கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகும், 'காமெடி கில்லாடிகளு' ரியாலிடி ஷோவில் பங்கேற்று, மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.
'ரியாலிடி ஷோவில் பங்கேற்ற பின், தனக்கு நாடகங்கள், திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும். வருவாய் வரும்' என, சந்திரசேகர் எதிர்பார்த்தார். ஆனால் சிறு கதாபாத்திரமும் கிடைக்கவில்லை. இதனால் கூலி வேலை செய்து வந்தார். தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், மனம் நொந்திருந்த அவர், நேற்று மாலை, கட்டிகே வனப்பகுதியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
எல்லாபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.