sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐந்து முக்கிய கோவில்களில் ஆணையம்; கவர்னர் ஒப்புதல்

 ஐந்து முக்கிய கோவில்களில் ஆணையம்; கவர்னர் ஒப்புதல்

 ஐந்து முக்கிய கோவில்களில் ஆணையம்; கவர்னர் ஒப்புதல்


ADDED : மே 29, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவின் முக்கியமான ஐந்து கோவில்களின் மேம்பாட்டுக்கு, தனித்தனி ஆணையம் அமைக்க, கவர்னர் தாவர்சந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகாவின் முக்கியமான கோவில்களை மேம்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும், அரசு திட்டமிட்டது.

இதற்காக, மைசூரின் சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம், பெலகாவியின் ரேணுகா எல்லம்மா கோவில் மேம்பாட்டு ஆணையம், தொட்டபல்லாபூரின் காடி சுப்ரமண்ய சுவாமி கோவில் மேம்பாட்டு ஆணையம், கொப்பால் மாவட்டம், ஹுலகியின் ஹுலிகெம்மா கோவில் மேம்பாட்டு ஆணையம், சாம்ராஜ்நகரின் மலை மஹாதேஸ்வரா மலை மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையங்கள் அமைக்கும் மசோதாவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, ஐந்து கோவில்களின் மேம்பாடு ஆணையங்கள், செயல்பாட்டுக்கு வருகின்றன. கோவில்களில் தடையின்றி பூஜைகள் நடக்க, அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இந்த ஆணையங்கள் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us