/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை பள்ளங்கள் சீரமைப்பு பைக்கில் கமிஷனர் ஆய்வு
/
சாலை பள்ளங்கள் சீரமைப்பு பைக்கில் கமிஷனர் ஆய்வு
ADDED : செப் 30, 2025 05:33 AM
பெங்களூரு: பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன், நேற்று காலை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பைக்கில் சென்று, சாலைப் பள்ளங்கள் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
பெங்களூரில் சாலைப் பள்ளங்களால், விபத்துகள் ஏற்படுகின்றன. மக்களின் நடமாட்டத்துக்கும் தொந்தரவாக உள்ளது. பள்ளங்களை மூடும்படி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நகரின் பல இடங்களில், சாலைப் பள்ளங்களை மூடும் பணிகள் நடக்கின்றன.
பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன், நேற்று காலை பைக்கில் வலம் வந்து, சாலைப் பள்ளங்களை மூடும் பணிகளை ஆய்வு செய்தார். புல் டெம்பல் சாலை, வாணி விலாஸ் சாலை, சங்கரமடம் சாலை, கே.ஆர்.சாலை, நேஷனல் கல்லுாரி சாலை, ஆர்.வி.சாலை, ஆசிரியர் கல்லுாரி அருகில் உள்ள சாலை, ஓசூர் சாலை, மரிகவுடா சாலை, ஜே.சி.சாலை, பூர்ணிமா டாக்கீஸ் சாலை, லால்பாக் சாலை என, பல சாலைகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர், 'சாலைப் பள்ளங்களை மூடும் பணிகள் தரமாக இருக்க வேண்டும். சதுக்கங்கள், ஜங்ஷன்களை மேம்படுத்துங்கள். சாலை ஓரங்களில் குப்பை பிளாக் ஸ்பாட்டுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நடைபாதைகளை சீரமைத்து, பாதசாரிகள் நடமாட்டத்துக்கு வசதி செய்யுங்கள்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.