ADDED : ஆக 19, 2026 11:16 PM
பெங்களூரு: ' ' பி.எம்.டி.சி., பஸ்களின் உதிரி பாகங்கள் வாங்குவதில், முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, ' ' என, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
காங்., - கோவிந்த ராஜ்: பி.எம்.டி.சி., பஸ்களின் உதிரி பாகங்கள் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளது. எவ்வளவு தொகைக்கு முறைகேடு நடந்துள்ளது.
இதை பற்றி விசாரணை நடத்த, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா? முறைகேட்டில் தொடர்பு கொண்டவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; போலியான பில்களை உருவாக்கி, மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது, கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளதா?
அமைச்சர் பைரதி சுரேஷ்: பஸ்களின் உதிரி பாகங்கள் வாங்கியதில், முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தவுடன், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்காக மார்ச் 27ம் தேதிஅன்று, ஐந்து அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
கமிட்டி அளித்த முதற்கட்ட அறிக்கை அடிப்படையில், எட்டு அதிகாரிகள், ஊழியர்க்ள சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அக்டோபர் இறுதியில், கமிட்டி இறுதி அறிக்கையை அளிக்கும். அதன்பின் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
