/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிருஷ்ணா மேலணைக்கு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இழப்பீடு அறிவிப்பு
/
கிருஷ்ணா மேலணைக்கு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இழப்பீடு அறிவிப்பு
கிருஷ்ணா மேலணைக்கு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இழப்பீடு அறிவிப்பு
கிருஷ்ணா மேலணைக்கு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இழப்பீடு அறிவிப்பு
ADDED : செப் 17, 2025 07:37 AM

பெங்களூரு : கிருஷ்ணா மேலணை 3வது கட்ட பணிகளுக்காக, கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.
கிருஷ்ணா மேலணை 3வது கட்ட பணிகள், அலமாட்டி அணையின் உயரத்தை 519 மீட்டரில் இருந்து 524 மீட்டராக உயர்த்துவது குறித்து விவாதிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின், முதல்வர் அளித்த பேட்டி:
மத்திய நதிநீர் தீர்ப்பாய உத்தரவின்படி அலமாட்டி அணையின் உயரத்தை 519 மீட்டரில் இருந்து 524 மீட்டராக உயர்த்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணையின் உயரத்தை அதிகரிப்பதன் மூலம் 75,000 ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது.
அணை உயரத்தை அதிகரிப்பதன் மூலம், 14 முதல் 15 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியும். கிருஷ்ணா மேலணை பணி மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் பாகல்கோட், விஜயபுரா, யாத்கிர், கலபுரகி, ராய்ச்சூர், கொப்பால், கதக் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க முடியும்.
திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, பல முறை ஆலோசிக்கப்பட்டுள்ளது. தற்போது திட்டத்திற்காக நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு, பாசன நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய்; வறண்ட நிலத்திற்கு ஏக்கருக்கு 30 லட்சம் ரூபாய் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு, மூன்று நிதி ஆண்டுகளுக்குள் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்துள்ளோம். பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது குறைந்த இழப்பீடு தொகை தருவதாக கூறியதால், விவசாயிகள் ஒப்பு கொள்ளவில்லை. திட்டம் முடங்கிப் போனது. திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.70,000 கோடி கிருஷ்ணா மேலணை 3வது கட்ட பணிகளுக்காக, 1,33,867 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 15,000 கோடி ரூபாய் முதல் 20,000 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படும். மொத்த மதிப்பு 70,000 கோடி ரூபாய். விவசாயிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருத்தை பெற்ற பிறகு, கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிலத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பா.ஜ., ஆட்சியில் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, ஒரு ஏக்கர் பாசன நிலத்திற்கு 24 லட்சம் ரூபாயும்; ஒரு ஏக்கர் வறண்ட நிலத்திற்கு 20 லட்சம் ரூபாயும் இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டாலும் விவசாயிகள் ஒப்புக்கொள்ளவில்லை. மேலணை திட்டத்தின் ஒரு பகுதியாக கால்வாய் கட்டுமான பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. சிவகுமார், துணை முதல்வர்