தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாய், சேய் இறப்பு டாக்டர்கள் மீது புகார்

தாய், சேய் இறப்பு டாக்டர்கள் மீது புகார்

தாய், சேய் இறப்பு டாக்டர்கள் மீது புகார்


ADDED : ஆக 07, 2025 09:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 09:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர் : பிரசவத்துக்கு வந்த இளம்பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், சிங்கேனஹள்ளியில் வசித்தவர் சுஷ்மிதா, 24. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை, நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக, குடும்பத்தினர் தொட்டபல்லாபூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், 'நாளை (இன்று) வாருங்கள். பிரசவம் பார்க்கிறோம்' என கூறினர். அதன்படி குடும்பத்தினர், நேற்று காலை சுஷ்மிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர். சேர்த்த சிறிது நேரத்தில் குழந்தை பிறக்காமலேயே அவரும், குழந்தையும் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். தாய், சேய் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

'மகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குடும்பத்தினர் தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us