/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவி மர்மச்சாவு வார்டன் மீது புகார்
/
மாணவி மர்மச்சாவு வார்டன் மீது புகார்
ADDED : நவ 05, 2025 11:55 PM

ஷிவமொக்கா: ஷிவமொக்கா நகரில், சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு தங்கி வனிஷா, 21, என்ற மாணவி, ஷிவமொக்காவின், டி.வி.எஸ்., கல்லுாரியில் இறுதியாண்டு பி.எஸ்சி., படித்து வந்தார்.
இவர் நேற்று காலை சிற்றுண்டி சாப்பிட்டு மீண்டும் மாடிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. சக மாணவியர் துவைத்த துணியை உலர்த்துவதற்காக, மேலே சென்றபோது, தண்ணீர் தொட்டி குழாயில், துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
வனிஷாவின் பெற்றோர் அளித்த புகாரில், 'என் மகள் சாவுக்கு விடுதி வார்டன் ஸ்வப்னாவே காரணம். மற்ற மாணவியரின் முன்னிலையில், வனிஷாவை திட்டியுள்ளார்.
'அவர் இறப்புக்கு பின், எங்களுக்கு போன் செய்த வார்டன் ஸ்வப்னா, 'உங்கள் மகள் துாக்க மாத்திரை தின்றுவிட்டார். உடனே வாருங்கள்' என்றார். மகள் துாக்கிட்ட நிலையில் இருக்கும்போது, மாத்திரை சாப்பிட்டதாக, வார்டன் கூறியது ஏன் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.
போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

