sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ரூ.72 கோடி முறைகேடு 2 அதிகாரிகள் மீது புகார்

/

ரூ.72 கோடி முறைகேடு 2 அதிகாரிகள் மீது புகார்

ரூ.72 கோடி முறைகேடு 2 அதிகாரிகள் மீது புகார்

ரூ.72 கோடி முறைகேடு 2 அதிகாரிகள் மீது புகார்


ADDED : ஜூலை 21, 2025 07:17 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொப்பால் : கொப்பாலின் கே.ஆர்.ஐ.டி.எல்., எனும் கர்நாடக ரூரல் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், நடந்த முறைகேடு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் நாகேந்திரா அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. பலர் சிறைக்கு சென்றனர். இதுபோன்ற முறைகேடு, கே.ஆர்.ஐ.டி.எல்.,லில் நடந்துள்ளது.

கொப்பால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 2019 முதல் 2025 வரை 96 பணிகள் நடந்துள்ளன. கிராமங்களில் சாக்கடை கால்வாய் அமைப்பது, குடிநீர் விநியோகிப்பது, சாலை சீரமைப்பு என, பல்வேறு பணிகள் நடந்ததாக கூறி, 72 கோடி ரூபாய் பில் தொகை வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நடவடிக்கை எடுத்த மாநில அரசு, கே.ஆர்.ஐ.டி.எல்., லின் கொப்பால் பிரிவின் அன்றைய பொறியாளர் சிஞ்சோலிகர், ஒப்பந்த ஊழியர் களகப்பா நிடகுந்தி ஆகியோரை, சஸ்பெண்ட் செய்திருந்தது. இது குறித்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது உறுதியானது. பணிகளே முடிக்காமல் பில் தொகை வழங்கியுள்ளனர்.

எனவே கே.ஆர்.ஐ.டி.எல்., இயக்குநர் பசவராஜின் உத்தரவுப்படி, கொப்பால் பிரிவு அதிகாரிகள் அனில் பாட்டீல், ஆனந்த் கார்லகுந்தி ஆகியோர், நேற்று கொப்பாலின் லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு சென்று, சிஞ்சோலிகர், களகப்பா மீது புகார் அளித்தனர்.

நடந்துள்ள ஊழல் தொடர்பான, அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us