/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சேரி' என்ற வார்த்தையை பயன்படுத்திய பிக்பாஸ் அஸ்வினி கவுடா மீது புகார்
/
'சேரி' என்ற வார்த்தையை பயன்படுத்திய பிக்பாஸ் அஸ்வினி கவுடா மீது புகார்
'சேரி' என்ற வார்த்தையை பயன்படுத்திய பிக்பாஸ் அஸ்வினி கவுடா மீது புகார்
'சேரி' என்ற வார்த்தையை பயன்படுத்திய பிக்பாஸ் அஸ்வினி கவுடா மீது புகார்
ADDED : அக் 23, 2025 11:04 PM

ராம்நகர்: சக பிக்பாஸ் போட்டியாளர் ரக் ஷிதா ஷெட்டியை பார்த்து, 'சேரி' என்ற வார்த்தையை பயன்படுத்திய அஸ்வினி கவுடா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராம்நகர் பிடதி தொழிற்பேட்டையில் உள்ள பிக்பாஸ் அரங்கில் கன்னட பிக்பாஸ் 12வது சீசன் நடக்கிறது. கடந்த 16ம் தேதி பிக்பாஸ் வீட்டில் உள்ள தோட்ட பகுதியில், போட்டியாளர்கள் அஸ்வினி கவுடாவும், ஜானவியும் சக போட்டியாளர் ரக் ஷிதா ஷெட்டியை பற்றி பேசுகையில், 'ரக் ஷிதா ஷெட்டி சேரி போல விளையாடுகிறாள்.
அவளை போன்று தரம் தாழ்ந்து நம்மால் விளையாட முடியாது' என, அஸ்வினி கவுடா கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட சண்டையின்போது, ரக் ஷிதா வை பார்த்து சேரி என்ற வார்த்தையை, அஸ்வினி பயன்படுத்தினார். இது அப்படியே ஒளிபரப்பானது. ரக் ஷிதாவை சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தி திட்டி, ஒரு சமூக மக்களை அவமதித்ததாக கூறி, அஸ்வினி கவுடா, கலர்ஸ் கன்னடா டிவியின் வணிக தலைவர் பிரசாந்த் நாயக் உட்பட நான்கு பேர் மீது, பிடதி போலீஸ் நிலையத்தில் உயர் நீதிமன்ற வக்கீல் பிரசாந்த் மெட்டல் என்பவர் நேற்று புகார் செய்தார்.
புகாரை பெற்று, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
கடந்த சீசனில் போட்டியாளர் ட்ரோன் பிரதாப்பை, அவரது ஜாதியை சொல்லி அவமதித்ததாக, தனிஷா குப்பந்தா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது குறிப்பிடத்தக்கது.

