/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இந்திரா கேன்டீனில் முறைகேடு கலெக்டருக்கு பறந்த புகார்
/
இந்திரா கேன்டீனில் முறைகேடு கலெக்டருக்கு பறந்த புகார்
இந்திரா கேன்டீனில் முறைகேடு கலெக்டருக்கு பறந்த புகார்
இந்திரா கேன்டீனில் முறைகேடு கலெக்டருக்கு பறந்த புகார்
ADDED : ஜூலை 14, 2025 05:29 AM
சீனிவாசப்பூர் : சீனிவாசப்பூரில் உள்ள இந்திரா கேன்டீனில் முறைகேடு நடப்பதாகவும், தரமற்ற உணவு வழங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சீனிவாசப்பூர் டவுன் சபை அருகே இந்திரா கேன்டீன் திறக்கப்பட்டது. இங்கு குறைந்த கட்டணத்தில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தலா 500 பேர் வீதம் 1,500 பேருக்கு உணவு வழங்க ஒப்பந்ததாரருக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது.
கிராமங்களில் இருந்து நகருக்கு வேலைக்கு வருவோரும், பள்ளிகள், கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்களும், நகர பகுதியின் ஏழைகளும் தினமும் இந்திரா கேன்டீனை நம்பி வருகின்றனர்.
ஆனால் இங்கு அண்மைக்காலமாக 100 பேருக்கு உணவு கிடைப்பதே அரிதாகி உள்ளது. உணவு கிடைக்காமல் 75 சதவீதம் பேர் ஏமாற்றம் அடைகின்றனர்.
இது மட்டுமின்றி முதலில் சூடான சுவையான உணவு வழங்கப் பட்டது. தற்போது எதுவுமே இல்லை என்று உணவு சாப்பிடுவோர் கூறுகின்றனர்.
மலிவு விலை அரிசியில் தயாரான உணவை வழங்குகின்றனர். மலிவு விலை உணவு என்பதால் படுமோசமான உணவை வழங்கலாமா. குடிநீர், சமையலுக்கு பயன்படுத்தும் நீரும் சுத்தம் இல்லை. இதன் மீது அதிகாரிகள் கவனிக்க வேண்டும். ஒப்பந்ததாரரிடம் கேட்க வேண்டும் என சீனிவாசப்பூரின் விவசாய சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திரா கேன்டீனில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றுள்ளன.