தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஈஸ்வரப்பாவுக்கு மிரட்டல் எஸ்.பி., யிடம் புகார்

ஈஸ்வரப்பாவுக்கு மிரட்டல் எஸ்.பி., யிடம் புகார்

ஈஸ்வரப்பாவுக்கு மிரட்டல் எஸ்.பி., யிடம் புகார்


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 07:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு, இதற்கு முன் வெளி நாடுகளில் இருந்து கொலை மிரட்டல் வந்தது. இதுகுறித்து அவர், போலீசாரிடமும் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே அக்டோபர் 17ம் தேதி இரவு, ரிஸ்வான் பெய்க் என்பவர், ஈஸ்வரப்பாவை போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்; கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை அவர் பொருட்படுத்தவில்லை. இதை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு, பரான் ரஷீத் என்பவர் மிரட்டல் விடுத்து உள்ளார். ஷிவமொக்கா எஸ்.பி., நிகில் அலுவலகத்துக்கு நேற்று நேரில் சென்ற ஈஸ்வரப்பா, எழுத்து பூர்வமாக புகார் அளித்தார்.

அவர் அளித்த பேட்டி:

எனக்கு மிரட்டல் விடுத்த இருவரும், இந்தியாவில் தா ன் உள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என, போலீசாரிடம் புகார் அளித்தேன். பாதுகாப்பு அளிப்பதாக, எஸ்.பி., கூறியுள்ளார்.

முதல் முறை ரிஸ்வான் பெய்க் எனக்கு போன் செய்த போது, நான் குடும்பத்துடன் திரையரங்கில் இருந்தேன். போனில் அவர், ஏதேதோ பேசினார்.

இரண்டாவது முறை போன் செய்த பரான் ரஷித் என்பவர், அமைச்சர் ஜமீர் அகமது கானை பற்றி, நான் பேசியதை சுட்டிக்காட்டி மிரட்டினார். இவர்கள் இருவரும் இந்தியாவில் இருப்பவர்கள் என, நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us