/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொழிற்சாலைக்கு எதிர்ப்பு ; கொப்பாலில் முழு அடைப்பு
/
தொழிற்சாலைக்கு எதிர்ப்பு ; கொப்பாலில் முழு அடைப்பு
தொழிற்சாலைக்கு எதிர்ப்பு ; கொப்பாலில் முழு அடைப்பு
தொழிற்சாலைக்கு எதிர்ப்பு ; கொப்பாலில் முழு அடைப்பு
ADDED : பிப் 25, 2026 05:48 AM
கொப்பால்: இரும்பு தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொப்பாலில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
கொப்பால் அருகே ஹலகர்த்தி கிராமத்தின் தொழிற்பேட்டையில், 'பால்டோட்டா' என்ற நிறுவனத்தின், இரும்பு தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், விளைநிலங்களில் உள்ள பயிர்கள் கருகுவதாகவும், கடந்த ஆண்டு விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். முதல்வர் சித்தராமையா உத்தரவின்படி, தொழிற்சாலை பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது தொழிற்சாலையில் பணிகள் மீண்டும் துவங்கி உள்ளது. இதனை கண்டித்து கொப்பாலில் நேற்று முழு அடைப்பு நடந்தது. விவசாயிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பஸ்கள் குறைந்த அளவே இயங்கியதால், பயணியர் சிரமம் அடைந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த கொப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னால், கொப்பால் காங்கிரஸ் எம்.பி., ராஜசேகர் ஹிட்னாலிடம், விவசாயிகள் வாக்குவாதம் செய்து திருப்பி அனுப்பினர்.

