/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஹல்காம் சம்பவத்தை கண்டித்து சிக்கமகளூரில் இன்று முழு அடைப்பு
/
பஹல்காம் சம்பவத்தை கண்டித்து சிக்கமகளூரில் இன்று முழு அடைப்பு
பஹல்காம் சம்பவத்தை கண்டித்து சிக்கமகளூரில் இன்று முழு அடைப்பு
பஹல்காம் சம்பவத்தை கண்டித்து சிக்கமகளூரில் இன்று முழு அடைப்பு
ADDED : மே 04, 2025 11:30 PM
சிக்கமகளூரு: பஹல்காம் சம்பவம், சுகாஸ் கொலையை கண்டித்து, சிக்கமகளூரு மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங் தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி, கடந்த 1ம் தேதி மங்களூரு கின்னிபதவு பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில் இருவர் சிக்கமகளூரின் கலசாவை சேர்ந்த ரஞ்சித், 19, நாகராஜ், 20. மற்ற ஆறு பேரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
சுகாஸ் கொலையில் ரஞ்சித், நாகராஜிக்கு தொடர்பு இருப்பதால், சிக்கமகளூரில் வசிக்கும் ஹிந்து அமைப்பினர் கொந்தளித்து உள்ளனர்.
கலசாவில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தட்சிண கன்னடா - சிக்கமகளூரு எல்லையான கொட்டிகேஹாராவில் சோதனை சாவடி அமைத்து, போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் சுகாஸ் கொலை; பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் இறந்ததை கண்டித்து, சிக்கமகளூரு மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்து உள்ளது. இதனால் மாவட்டம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
முழு அடைப்பு போராட்டம் என்றாலும் பஸ்கள் வழக்கம் போல ஓடும். மாவட்டத்தின் 7 தாலுகாக்களிலும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கடைகள் அடைக்கப்படும். முக்கிய சந்திப்புகளில் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் தயாராகி வருகின்றனர்.