'ஜப்த ி ' பொருட்கள் மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைப்பு
'ஜப்த ி ' பொருட்கள் மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 01, 2026 11:06 PM
யாத்கிர்: நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீடு வழங்காத வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, 'ஜப்த ி ' செய்யப்பட்ட யாத்கிர் நகராட்சியின் அசையும் சொத்துகள் மீண்டும் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.
யாத்கிர் மாவட்டத்தில் யாத்கிர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி பாய். நகராட்சி வளர்ச்சி பணிகளுக்காக, இவருக்கு சொந்தமான 6,656 சதுர அடி நிலம், 1983 - 84ல் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால், இதற்கான முழு இழப்பீடும் வழங்கவில்லை. இது தொடர்பாக, பலமுறை நகராட்சியில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சரஸ்வதி பாய் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், நகராட்சியின் அசையா சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 30ம் தேதி அலுவலகத்தில் இருந்த கணினி, மேஜைகள் ஜப்தி செய்யப்பட்டன.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் உமேஷ் சவான், நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜப்திக்கு தடை விதித்து, விசாரைணயை ஆக., 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதையடுத்து, ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள், மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.
நகராட்சி கமிஷனர் உமேஷ் சவான் அளித்த பேட்டி:
சரஸ்வதி பாய் வழக்கில், ஆக., 8ம் தேதிக்குள் 10 லட்சம் ரூபாய் செலுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இக்காலக்கெடுவுக்குள், 10 லட்சம் செலுத்தப்படும். வரும் நாட்களில் நீதிமன்ற உத்தரவுபடியே செயல்படுவேன்.
இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பில் தவறுகள் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு இதுவரை, 31 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு வீடுகள், கடைகள், பெரிய கட்டடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட பல்வேறு சொத்துகளில் இருந்து நகராட்சிக்கு 10 முதல், 15 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது.
வரி பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில், நோட்டீஸ் அனுப்பி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
