/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீதர் காங்கிரசில் வெடித்தது மோதல் அமைச்சருக்கு எதிராக தனி அணி
/
பீதர் காங்கிரசில் வெடித்தது மோதல் அமைச்சருக்கு எதிராக தனி அணி
பீதர் காங்கிரசில் வெடித்தது மோதல் அமைச்சருக்கு எதிராக தனி அணி
பீதர் காங்கிரசில் வெடித்தது மோதல் அமைச்சருக்கு எதிராக தனி அணி
ADDED : ஆக 27, 2025 07:43 AM

பீதர் : பீதர் காங்கிரசில் மோதல் வெடித்துள்ளது. அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு எதிராக, தனி அணி உருவாகி உள்ளது.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே. இவர், பீதர் மாவட்டத்தின் பால்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பீதர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். இவரது மகன் சாகர் கன்ட்ரே, பீதர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., மாநிலத்தில் பலம் வாய்ந்த லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடுகிறது.
தற்போது இவருக்கு எதிராக பீதர் காங்கிரசில், முன்னாள் அமைச்சர் ராஜசேகர பாட்டீல் தலைமையில், தனி அணி உருவாகி உள்ளது.
இந்த அணியில் முன்னாள் எம்.எல்.சி., அரவிந்த்குமார் அரளி உள்ளிட்ட தலைவர்களும் உள்ளனர். 2023 சட்டசபை தேர்தலில், பீதர் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில், இரண்டு இடங்களில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
மற்ற நான்கு தொகுதிகளும் பா.ஜ., வசம் சென்றன. குறிப்பாக ஹும்னாபாத் தொகுதியில், மூன்று முறை வெற்றி பெற்ற ராஜசேகர பாட்டீல் தோற்றுப் போனார். தன் தோல்விக்கு ஈஸ்வர் கன்ட்ரே தான் காரணம் என்பது அவரது குற்றச்சாட்டு.
அடுத்த தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் கட்சியை வெற்றி பெற வைக்க உழைக்காமல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுடன் சேர்ந்து உள்ஒப்பந்த அரசியல் செய்வதாக ஈஸ்வர் கன்ட்ரே மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த, ராஜசேகர பாட்டீல் தலைமையிலான அணியினர், ஈஸ்வர் கன்ட்ரே மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து முறையிடவும் தயாராகி வருகின்றனர்.

