அமைச்சர் தாமதமாக வந்ததால் காங்., - எம்.எல்.ஏ., புறக்கணிப்பு
அமைச்சர் தாமதமாக வந்ததால் காங்., - எம்.எல்.ஏ., புறக்கணிப்பு
ADDED : செப் 29, 2026 03:46 AM

மைசூரு: மைசூரு அரண்மனை வளாகத்தில் யானை பாகன்கள், அவரது குடும்பத்தினருக்கு, 'சிறப்பு காலை விருந்து'க்கு மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி நேற்று காலை 8:45 மணிக்கு துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில், பங்கேற்பதற்காக நரசிம்மராஜா தொகுதி எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் முதலில் வந்தார். ஆனால், மாவட்ட பொறுப்பு அமைச்சர் யதீந்திரா வரவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த தன்வீர், மாவட்ட கலெக்டரிடம் கேள்வி கேட்டார். பலரும் உணவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். எதையாவது செய்யுங்கள்ன்' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து, காலை 9:30 மணிக்கு யதீந்திரா, நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். உணவு பரிமாறி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
தாமதம் குறித்து யதீந்திரா கூறுகையில், ''தனிப்பட்ட விஷயங்களால் வர தாமதமாகி விட்டது. தாமதமாக வந்ததற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. இது குறித்து தன்வீரிடம் மொபைல் போனில் பேசினே ன்,'' என்றார்.
