மெட்ரோ ரயில் துவக்கத்தில் தாமதம் பொது மக்கள் நுாதன போராட்டம்
மெட்ரோ ரயில் துவக்கத்தில் தாமதம் பொது மக்கள் நுாதன போராட்டம்
ADDED : செப் 29, 2026 03:45 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரின் காளேன அக்ரஹாராவில் இருந்து நாகவாரா வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மெட்ரோ ரயில் சேவையை துவங்க பல முறை மக்கள் கோரிக்கை வைத்த போதிலும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை துவங்க தாமதப்படுத்தும் அரசு, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் அதிகாரிகளை கண்டித்து, காளேன அக்ரஹாரா மெட்ரோ ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் ரிப்பன் கட்டி, அதை தாங்களே வெட்டி, ரயில் நிலையம் திறக்கப்பட்டு விட்டது என்று கோஷம் எழுப்பி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. பி.எம்.ஆர்.சி.எல்.,லுக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
