தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வழக்கில் ஆஜராகாமல் 'டிமிக்கி' விவசாய சங்க தலைவர் கைது

 வழக்கில் ஆஜராகாமல் 'டிமிக்கி' விவசாய சங்க தலைவர் கைது

 வழக்கில் ஆஜராகாமல் 'டிமிக்கி' விவசாய சங்க தலைவர் கைது


ADDED : செப் 29, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: கலசா - பண்டூரி திட்டம் செயல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, 2013ல் விவசாயிகள் ஹூப்பள்ளியில் ஆறு மணி நேரம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்கத்தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உட்பட பலர், கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது ஹூப்பள்ளி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ஹூப்பள்ளி ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை கட்டத்தில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கோடிஹள்ளி சந்திரசேகர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பல முறை உத்தரவிட்டும் ஆஜராகாத காரணத்தால், அவரை கைது செய்யும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அவரை ஹூப்பள்ளி ரயில்வே போலீசார், சிர்சியில் நேற்று காலை கைது செய்தனர்.

ஹூப்பள்ளியின், ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது, கோடிஹள்ளி சந்திரசேகர் ஜாமின் அளிக்கும்படி, வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரது வேண்டுகோளை நிராகரித்த நீதிபதி சச்சின் குமார் சிவபூஜே, ''அனைத்து போராட்டக்காரர்களையும், நீதிமன்றம் மதிப்புடன் பார்க்கிறது.

''அதேபோன்று அவர்களும், நீதிமன்றத்தை மதிக்க வேண்டும். சட்டத்தை மதிக்காத போராட்டக்காரர்கள், போராட்டக்காரர்களே அல்ல. நீங்கள் இந்த வழக்கில் 2019ல் இருந்து விசாரணைக்கு ஆஜராகவில்லை. இப்போது மீண்டும் ஜாமின் அளித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டீர்கள்,'' என அதிருப்தி தெரிவித்தார்.

கோடிஹள்ளி சந்திரசேகரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் அவரை போலீசார், சிறைக்கு அழைத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us