தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'அப்ரூவர்' பிரதோஷ் வாக்குமூலம்: நடிகர் தர்ஷன், பவித்ரா கலக்கம்

 'அப்ரூவர்' பிரதோஷ் வாக்குமூலம்: நடிகர் தர்ஷன், பவித்ரா கலக்கம்

 'அப்ரூவர்' பிரதோஷ் வாக்குமூலம்: நடிகர் தர்ஷன், பவித்ரா கலக்கம்


ADDED : செப் 29, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், 'அப்ரூவர்' பிரதோஷ் ராவிடம் நேற்று வாக்குமூலம் வாங்கப்பட்டது. இதை சிறையில் இருந்தபடி காணொளி மூலம் பார்த்த தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோர் கலக்கம் அடைந்து உள்ளனர்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், அப்ரூரவர் பிரதோஷ் ராவின் வாக்குமூலத்தை பெற, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தள்ளுபடி இந்த உத்தரவை எதிர்த்து, தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இருவரின் மனுக்களையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், செப்., 28ம் தேதி அப்ரூவர் பிரதோஷ் ராவிடம் வாக்குமூலம் பெற, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் தேதி நிர்ணயித்தது.

'இந்த வாக்குமூலத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதால், ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்' என தர்ஷன் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், குறிப்பிட்ட நாளில் வாக்குமூலம் பெறப்படும் என உறுதியாக கூறியது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நீதிபதி உத்தரவு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன், பிரதோஷ் ராவ் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்ற அறைக்கு அவர் வந்ததும், வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேறும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இரு தரப்பு வக்கீல்கள், வழக்கு சம்பந்தப்பட்ட போலீசார் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன்பின், பிரதோஷின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மூன்றரை மணி நேரம் பதிவு செய்யப்பட்டது.

அடுத்த கட்ட வாக்குமூலத்தை, இன்று (29ம் தேதி) காலை 11:00 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து, பிரதோஷ் ராவ், பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மறுபுறம் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோர், சிறையில் இருந்தபடி காணொளி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பவித்ரா கவுடா கண்ணீர் விட்டு அழுததாகவும், தர்ஷன் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வாக்குமூலம் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், இருவரும் கலக்கத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us