தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் கஷ்டம் ஜி.பி.ஏ., அதிகாரிகள் விரக்தி

 ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் கஷ்டம் ஜி.பி.ஏ., அதிகாரிகள் விரக்தி

 ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் கஷ்டம் ஜி.பி.ஏ., அதிகாரிகள் விரக்தி


ADDED : செப் 29, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஜி.பி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள 183 ஏரிகளில் 49 ஏரிகளில் மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் நிலத்தின் விலை அதிகரிப்பதால், ஏரிகளை ஆக்கிரமிப்பது சகஜமாகி விட்டது. 39 ஏரிகளை அரசு துறைகளே ஆக்கிரமித்துள்ளன.

78 ஏரிகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஆக்கிரமித்துள்ளன. பல்வேறு இடங்களில், ஏரி நிலம் மைதானமாகவும், பூங்காக்களாகவும் மாற்றியுள்ளனர்.

சில இடங்களில், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கவும்; சில இடங்களில் ஏழைகள், ஆதரவற்றோருக்கு அரசு வீடு கட்டி கொடுக்கவும் ஏரி நிலத்தை பயன்படுத்தியுள்ளது.

ஏரி இடத்தில் கட்டப்பட்டுள்ள பல கட்டடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடங்களாகும். இவைகள் ஏரிகளை, பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கு முன்பே கட்டப்பட்டவை. நாங்கள் ஏரிகளை பாதுகாப்பவர்கள் மட்டுமே.

நாங்கள் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து, இடத்தை மீட்டுள்ளோம். ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளோம். பொது நோக்கங்களுக்காக, அரசு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்பது கஷ்டம்.

எந்த உள்ளாட்சிகளும் இத்தகைய நிலத்தை மீட்க, முயற்சிப்பது இல்லை. ஜி.பி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள 183 ஏரிகளில், 49 ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. அவற்றை சீரமைத்து பாதுகாக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

நாங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பது, ஏரிகளுக்கு நல்லது தான். அசுத்த நீர் ஏரிகளுக்கு செல்வதை தடுக்கும். நாங்கள் எந்த வகையிலும் விதிகளை மீறவில்லை. கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்காக, ஏரி நிலம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக ஏரிகளில் மண்ணை அள்ளுவது, சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us