காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பனிப்போர்: சிக்கபல்லாபூரில் முதல்வருக்கு தலைவலி
காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பனிப்போர்: சிக்கபல்லாபூரில் முதல்வருக்கு தலைவலி
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 09:44 PM

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், காங்கிரசின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, பனிப்போர் நடப்பது முதல்வர் சிவகுமாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், சில நாட்களுக்கு முன், 'நமது கட்சியின் அரசு இருந்தாலும், சிந்தாமணியில் தலித்துகள் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு தீர்வு காண, அந்த தொகுதி எம்.எல்,ஏ., எந்த நடவடிக்கை எடுக்கவில்லை' என, பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.
சிந்தாமணி தொகுதியில் காங்கிரசின் சுதாகர் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இவரது தொகுதியில் தலித்துகளுக்கு, அநியாயம் நடப்பதாக, பிரதீப் ஈஸ்வர் குற்றஞ்சாட்டியதால், சுதாகருக்கு தர்மசங்கடம் ஏற்ப ட்டுள்ளது.
எனவே, இவரது ஆதரவாளர்கள், எரிச்சல் அடைந்துள்ளனர். பிரதீப் ஈஸ்வர் தன் தொகுதியில் பணியாற்றவில்லை. தேவையற்ற விஷயத்தில் தலையிடுகிறார். சிக்கபல்லாபூர் தொகுதியில் பல இடங்களில், குடிநீர் பிரச்னை உள்ளது. இந்த பிரச்னையை சரி செய்யாமல், தலித்துகளை தூண்டி விட்டு, கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக, குற்றம்சாட்டுகின்றனர்.
முதல்வர் சிவகுமாரை சந்தித்து, பிரதீப் ஈஸ்வர் மீது புகார் அளித்துள்ளனர். இவரது பணி சரியாக இல்லை. அடுத்த முறை தேர்தலில், இவருக்கு சீட் கொடுக்க கூடாது என, வலியுறுத்தியுள்ளனர்.
எம்.எல்,ஏ.,க்களின் மோதல், முதல்வர் சி வகுமாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சில நாட்களுக்கு முன், எம்.எல்.ஏ., ரூபகலாவுக்கும், நாராயணசாமிக்கும் சட்டசபையிலேயே காரசார வாக்குவாத ம் நடந்தது.
ரூபகலா தன்னை மிரட்டுவதாக, நாராயணசாமி குற்றம்சாட்டினார். இப்போது, சிக்கபல்லாபூர் மாவட்டத்திலும், பிரதீப் ஈஸ்வர், சுதாகர் இடையே பனிப்போர் முற்றுகிறது.
