தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹிந்துக்கள் கள்ள ஓட்டு போட மாட்டார்கள்: எத்னால்

ஹிந்துக்கள் கள்ள ஓட்டு போட மாட்டார்கள்: எத்னால்

ஹிந்துக்கள் கள்ள ஓட்டு போட மாட்டார்கள்: எத்னால்


UPDATED : அக் 04, 2026 10:09 PM

ADDED : அக் 04, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 10:09 PM ADDED : அக் 04, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: முஸ்லிம்கள் கள்ள ஓட்டு போடுவது அதிகம். ஹிந்துக்கள் கள்ள ஓட்டு போடமாட்டார்கள். இவர்களுக்கு அந்த தைரியம் இல்லை, என, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.

தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தேர்தலில் ஓட்டு போடும் போது, வாக்காளரின் முகம் தெரிய வேண்டும் என்பது, தேர்தல் விதிமுறையாகும். ஆனால் முஸ்லிம்கள் புர்கா போட்டு வந்து, ஒரே பெயரில் பத்து ஓட்டுகள் போடுகின்றனர். இதன் மூலம் இந்த நாட்டை, பாகிஸ்தானாக்க வேண்டும் என்ற சதி நடக்கிறது.

ஹிந்துக்கள் கள்ள ஓட்டு போடுவது இல்லை. அவர்களுக்கு அந்த தைரியம் இல்லை. அவர்கள் சட்டத்தை மீறுவது இல்லை.

முன்னாள் முதல்வர் சித்தராமையா, இத்தனை நாட்கள் குஷியாக இருந்துவிட்டு, இப்போது பல வலிகளை அனுபவிப்பதாக கூறுகிறார். சித்தராமையா மிகப்பெரிய சமுதாயத்தில் இருந்து வந்த தலைவர்.

கர்நாடக பா.ஜ.,வில், சமரச அரசியல் நடக்கிறது. தாவணகெரேவில் ஒரு கிளி உள்ளது. இந்த கிளியின் கழுத்தை திருகினால், பெங்களூரின் கதவு திறக்கும்.

பா.ஜ.,வில் தற்போது ஓட்டுகளை ஈர்க்கும் அளவுக்கு, எந்த தலைவர்கள் உள்ளனர். பா.ஜ., மேலிடம் இன்னும் 1980லேயே உள்ளது.

தமிழகத்தில் விஜய் அதிசயம் நிகழ்த்தியது போல, நானும் நிகழ்த்துவேன். ஏற்கனவே பிரசாரத்தை துவக்கியுள்ளேன். தேர்தலுக்கு பின், என் சக்தி என்ன என்பது, மாநில மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us