காங்., - எம்.எல்.ஏ., உளவு பார்க்கிறார்: ம.ஜ.த., பிரமுகர் நாகராஜு குற்றச்சாட்டு
காங்., - எம்.எல்.ஏ., உளவு பார்க்கிறார்: ம.ஜ.த., பிரமுகர் நாகராஜு குற்றச்சாட்டு
ADDED : மே 23, 2026 04:09 AM
துமகூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ், என்னை வேவு பார்க்கிறார். என் தனிப்பட்ட விபரங்களை சேகரிக்கிறார், என, ம.ஜ.த., பிரமுகர் நாகராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
துமகூரின், ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ், அவரது மனைவி பாரதி, மகன் துஷ்யந்த் ஆகியோர், என்னை பற்றியும், என் குடும்பத்தினர் பற்றியும் உளவு பார்க்கின்றனர்.
நான் என்னென்ன வேலை செய்கிறேன், எங்கு செல்கிறேன், யார் யாரை சந்திக்கிறேன் என, ஒவ்வொரு தகவல்களையும் சேகரிக்கின்றனர். என்னிடம் வேலை செய்வோருக்கு பணத்தாசை காட்டி, என்னை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் யாருடன் தொடர்பில் இருக்கிறேன் என்ற தகவல்களை கேட்டு அறிகின்றனர். சீனிவாசின் மகன் துஷ்யந்த், தன் பிளாட்டில் அமர்ந்து கொண்டு, எங்கள் தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
இதை பற்றி தொண்டர்கள் என்னிடம் கூறி, என்ன செய்யட்டும் என, கேட்டனர். நானும், சீனிவாஸ் என்ன கேள்வி கேட்டாலும், பதில் அளிக்கும்படி கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
