தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் மேலும் ரூ.177 கோடி சொத்து முடக்கம் 

 காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் மேலும் ரூ.177 கோடி சொத்து முடக்கம் 

 காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் மேலும் ரூ.177 கோடி சொத்து முடக்கம் 


ADDED : ஜன 30, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு சொந்தமான மேலும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, ஈ.டி., முடக்கி உள்ளது.

சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 50. சட்டவிரோதமாக ஆன்லைன் - ஆப்லைன் சூதாட்டம் நடத்திய இவர், சூதாட்டம் மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி ஈ.டி., எனும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நான்கு மாதங்களுக்கு பின், கடந்த மாதம் 30ம் தேதி அவருக்கு ஜாமின் கிடைத்தது. இதற்கிடையில் வீரேந்திர பப்பிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய ஈ.டி., 100 கோடி ரூபாய்க்கு மேலான தங்க கட்டிகள், நகைகள், விலை உயர்ந்த கார்களை பறிமுதல் செய்தது. குறுகிய காலத்தில் 2,300 கோடி ரூபாய் சம்பாதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், வீரேந்திர பப்பிக்கு சொந்தமான 177 கோடி ரூபாய் மதிப்பிலான, அசையும், அசையா சொத்துகளை முடக்கியதாக, ஈ,டி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. ஏற்கனவே 143 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, ஈ.டி., முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us