/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய கே.பி.அக்ரஹாரா இன்ஸ்பெக்டர்
/
லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய கே.பி.அக்ரஹாரா இன்ஸ்பெக்டர்
லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய கே.பி.அக்ரஹாரா இன்ஸ்பெக்டர்
லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய கே.பி.அக்ரஹாரா இன்ஸ்பெக்டர்
ADDED : ஜன 30, 2026 06:35 AM
பெங்களூரு: சீட்டு மோசடி வழக்கில் பெயரை சேர்ப்பதாக மிரட்டி, நபரிடம் நான்கு லட்சம் ரூபாய் வாங்கிய இன்ஸ்பெக்டர், லோக் ஆயுக்தாவிடம் சிக்கினார்.
பெங்களூரின், கே.பி.அக்ரஹாரா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜு. சீட்டு மோசடி குறித்து, போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது.
இந்த வழக்கில் சம்பந்தமில்லாத நபரின் பெயரை சேர்க்காமல் இருக்க வேண்டுமென்றால் அவரிடம் நான்கு லட்சம் ரூபாய் லஞ்சமாக இன்ஸ்பெக்டர் கேட்டார்.
இது குறித்து. அந்நபர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். அதிகாரிகளும் நடவடிக்கையில் இறங்கினர்.
மைசூரு சாலையின், சிர்சி சதுக் கம் அருகில், சி.ஏ.ஆர்., மைதானம் அருகில், நேற்று மதியம் அந்நபரிடம் இன்ஸ் பெக்டர் லஞ்சம் வாங்கும் போது, அங்கு சென்று திடீர் சோதனையிட்ட லோக் ஆயுக்தா போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
பணத்தையும் பறிமுதல் செய்தனர்; அவரிடம் விசாரணை நடக்கிறது.