sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பல பெண்களுடன் உல்லாசம் கல்லுாரி மாணவர் கைது

/

 பல பெண்களுடன் உல்லாசம் கல்லுாரி மாணவர் கைது

 பல பெண்களுடன் உல்லாசம் கல்லுாரி மாணவர் கைது

 பல பெண்களுடன் உல்லாசம் கல்லுாரி மாணவர் கைது


ADDED : ஜன 30, 2026 06:36 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடகு: பல பெண்களுடன், கல்லுாரி மாணவர் உல்லாசமாக இருந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியதால் அம்மாணவர் கைது செய்யப்பட்டார்.

குடகு மாவட்டத்தின் மடிகேரி பகுதியை சேர்ந்த பல பெண்களுடன், ஒரு வாலிபர் உல்லாசமாக இருப்பது; பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து குடகு மேம்பாட்டு குழு தலைவர் பிரசன்னா பட் அளித்த புகாரில், மடிகேரி ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், வீடியோவில் இருக்கும் வாலிபர், மடிகேரி நாபோக்லு கிராமத்தின் முகமது சவாத், 21 என்பதும், பெங்களூரில் தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., படித்து வருவதும் தெரிந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்கள் மூலம், பெண்களுக்கு முகமது சவாத் வலை விரிப்பார். இதில் சிக்கும் பெண்களிடம் நைசாக பேசி, காதல் வலையில் வீழ்த்துவார். அவர்களை சந்திக்கும் போது, திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருப்பார். இதனை மொபைல் போனில் வீடியோவும் எடுத்து, சில வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார். இது போன்று வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதை வெளியிட்டது, முகமது சவாத்தா அல்லது அவரது நண்பர்களா என்று விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us