பஸ்களில் குட்கா விளம்பரம் ராமலிங்க ரெட்டி 'அரிய' விளக்கம்
பஸ்களில் குட்கா விளம்பரம் ராமலிங்க ரெட்டி 'அரிய' விளக்கம்
ADDED : ஜன 30, 2026 06:36 AM

பெங்களூரு: மத்திய அரசு குட்கா பொருட்களை தடை செய்த பின், அரசு பஸ்களில் குட்கா தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறாது.
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பி.எம்.டி.சி., பஸ்களில் ஒட்டப்பட்டிருந்த குட்கா தொடர்பான விளம்பரங்களை, யுவ கர்நாடகா சங்கத்தினர் நேற்று முன்தினம் அகற்றினர்.
'இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் போதை பொருட்களை அரசு பஸ்களில் விளம்பரம் செய்யக்கூடாது' என வலியுறுத்தி அவர்களை அகற்றுவதாக கன்னட அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:
அரசு பஸ்சின் வெளிப்புறத்தில் 40 சதவீத பகுதியில் மட்டுமே விளம்பரங்கள் ஒட்ட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சில பஸ்களில் முழுமையாக விளம்பரங்கள் ஒட்டப்படுகின்றன.
இது விதிமீறலாகும். குட்கா பொருட்கள் மோசமானவை என்றால் மத்திய அரசு நாடு முழுதும் அவற்றை தடை செய்யட்டும். தடை செய்யப்பட்ட பின் பஸ்களில் விளம்பரங்கள் இடம்பெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
