/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா மீண்டும் வருகை
/
காங்., மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா மீண்டும் வருகை
காங்., மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா மீண்டும் வருகை
காங்., மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா மீண்டும் வருகை
ADDED : ஜூலை 12, 2025 10:54 PM
பெங்களூரு: அமைச்சர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அடுத்த வாரம் பெங்களூரு வருகை தருகிறார்.
தொகுதிக்கு நிதி கிடைப்பது இல்லை என்று, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பகிரங்கமாக பேசியதால், காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு கட்டமாக பெங்களூரு வந்த, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை பெற்று சென்று உள்ளார். அப்போது பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.
அடுத்த வாரம் மீண்டும் பெங்களூரு வர உள்ள சுர்ஜேவாலா, அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டு ஆண்டு காலம் பதவியில் இருந்து செய்தது என்ன; துறையில் என்ன மாற்றம் செய்து உள்ளீர்கள் என்று அறிக்கை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை அரவணைத்து செல்லும்படியும், அறிவுரை வழங்கவும் உள்ளார்.