/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹாசனில் காங்., மாநாடு: தேவகவுடா குற்றச்சாட்டு
/
ஹாசனில் காங்., மாநாடு: தேவகவுடா குற்றச்சாட்டு
ADDED : டிச 30, 2025 06:48 AM

ஹாசன்: ''எனது பலத்தை குறைக்க வேண்டும் என்பதே, காங்., கட்சியின் எண்ணம்,'' என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா குற்றம்சாட்டினார்.
ஹாசனில் ம.ஜ.த., தொண்டர்கள், தலைவர்களுடன் தேவகவுடா நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் அவர்பேசியதாவது:
ஹாசனில் முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தலைமையில், தலா ஒவ்வொரு மாநாட்டை காங்கிரஸ் நடத்தியதன் மர்மம் என்ன.
இது தேவகவுடா பிறந்து, வளர்ந்த மாவட்டம். ம.ஜ.த.,வை ஒழிக்க வேண்டும் என்பது, காங்கிரசின் குறிக்கோளா. நான் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்ட போது, என் மருமகன் டாக்டர் மஞ்சுநாத், என்னை காப்பாற்ற முயற்சித்தார். என் அருகிலேயே இருக்கும் ரேவண்ணா, சிருங்கேரி உட்பட பல இடங்களில் எனக்காக பூஜைகள் நடத்தினர். மக்களும் எனக்காக வேண்டினர். அதை மறக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

