/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போதுமப்பா காங்கிரஸ் அரசு' ம.ஜ.த., போஸ்டர் போராட்டம்
/
'போதுமப்பா காங்கிரஸ் அரசு' ம.ஜ.த., போஸ்டர் போராட்டம்
'போதுமப்பா காங்கிரஸ் அரசு' ம.ஜ.த., போஸ்டர் போராட்டம்
'போதுமப்பா காங்கிரஸ் அரசு' ம.ஜ.த., போஸ்டர் போராட்டம்
ADDED : ஏப் 13, 2025 08:36 AM

பெங்களூரு : விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டத்தை ம.ஜ.த.,வினர் துவக்கி உள்ளனர். அரசு பஸ்சின் பின்னால் 'போதுமப்பா காங்கிரஸ் அரசு' என்ற போஸ்டரை ஒட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் பால், மின்சாரம், பஸ் கட்டணம் என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை, மாநில காங்கிரஸ் அரசு உயர்த்தி வருகிறது. இதை கண்டித்து பா.ஜ.,வினர் 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை'யை துவக்கி உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ஜ.த., 'போதுமப்பா காங்கிரஸ் அரசு' என்ற போராட்டத்தை அறிவித்து 'போஸ்டர்' வெளியிட்டது.
இந்த போஸ்டர், நகரின் மஹாராணி கல்லுாரி பஸ் நிறுத்தம், கே.ஆர்., சதுக்கம் மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் பின்புறத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக, ஹலசூரு போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

