/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'உள் இடஒதுக்கீட்டு அறிக்கை அரசியலாக்கும் காங்., அரசு'
/
'உள் இடஒதுக்கீட்டு அறிக்கை அரசியலாக்கும் காங்., அரசு'
'உள் இடஒதுக்கீட்டு அறிக்கை அரசியலாக்கும் காங்., அரசு'
'உள் இடஒதுக்கீட்டு அறிக்கை அரசியலாக்கும் காங்., அரசு'
ADDED : செப் 03, 2025 09:56 AM

பெங்களூரு : ''உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை மாநில அரசு முறையாக செயல்படுத்த வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் வலியுறுத்தினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் உள் இடஒதுக்கீடு தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்தாஸ் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அறிக்கையின் பரிந்துரைகளை மாநில அரசு முறையாக செயல்படுத்த வேண்டும்.
ஆனால், அரசோ அதை புறக்கணித்து, தன் விருப்பப்படி உள்இடஒதுக்கீட்டை அறிவித்தது. இது சமூக நீதிக்கான முடிவு அல்ல; அரசியல் முடிவு. இதற்கு முன்பு, ஜே.சி.மதுசாமி குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள உள் இடஒதுக்கீடு பரிந்துரை நியாயமானது. மதுசாமி அல்லது மோகன்தாஸ் ஆகிய இருவரில் ஒருவரின் அறிக்கையை, அரசு முறையாக செயல்படுத்த வேண்டும்.
மோகன்தாஸ் ஆணையம் அறிக்கை தயாரிக்க, 150 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவரின் அறிக்கை செயல்படுத்தப்பட்டால், மாடிகர்களின் 35 ஆண்டுகால போராட்டத்துக்கு அர்த்தம் கிடைக்கும்.
ஆனால் அரசின் நடவடிக்கையால், மாடிகர்கள் மீண்டும் போராட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளனர். இந்த தவறை சரி செய்யாவிட்டால், அவர்கள் மீண்டும் போராடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.