தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எச்.என்.வேலி குடிநீர் திட்டத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது

 எச்.என்.வேலி குடிநீர் திட்டத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது

 எச்.என்.வேலி குடிநீர் திட்டத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது


ADDED : மார் 04, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: எச்.என்.வேலி குடிநீர் திட்டத்தில், காங்கிரஸ் அரசியல் செய்வதாக, பா.ஜ., பிரமுகர் சந்தீப் ரெட்டி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எச்.என்.வேலி குடிநீர் திட்டத்தில் இரண்டு நிலைகளில் மட்டுமே தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. மூன்றாவது நிலையிலும் தண்ணீரை கண்டிப்பாக சுத்திகரிக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது.

தற்போதைய இரண்டு நிலை சுத்திகரிப்பு தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், தேர்தலில் வெற்றி பின் சில நாட்கள், எச்.என்.வேலி குடிநீர் திட்டத்தை மூன்றாவது நிலையிலும் சுத்திகரிக்க வேண்டும் என்று கூறி வந்தார். தற்போது அதுபற்றி வாய் திறப்பதே இல்லை.

இப்பகுதியில் விளையும் காய்கறிகளில் நச்சு பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீரை காரணம். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

தொட்டபல்லாபூர், நெலமங்களா தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வேண்டாம் என்று அரசிடம் திட்டவட்டமாக கூறினர். ஆனால், எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் மீது என்ன அழுத்தம் உள்ளது என்று தெரியவில்லை. மூன்றாம் கட்ட சுத்திகரிப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காவிட்டால், சிக்கபல்லாபூரில் முழு அடைப்பும், பெங்களூரை நோக்கி டிராக்டர் பேரணி நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us