/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துணை முதல்வர் தொகுதியில் காங்., பிரமுகர் படுகொலை
/
துணை முதல்வர் தொகுதியில் காங்., பிரமுகர் படுகொலை
ADDED : ஜூலை 28, 2025 05:13 AM

பெங்களூரு தெற்கு :  துணை முதல்வர் சிவகுமாரின் சொந்த ஊரில், காங்கிரஸ் பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு தெற்கு கனகபுரா ஹொங்கானி தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேஷ், 45. காங்கிரஸ் பிரமுகர். அச்சலு கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவராக பணியாற்றி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, கனகபுராவின் சாத்தனுாரில் உள்ள தாபா எனும் உணவகத்துக்கு சாப்பிட சென்றார்.
உணவு சாப்பிட்டு விட்டு அவர் வெளியே வந்த போது, ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை சூழ்ந்து கொண்டு அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியதுடன், இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியது. பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நஞ்சேஷை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். நஞ்சேஷை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை.
ஹொங்கானி தொட்டி கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக நஞ்சேஷுக்கும், சிலருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் பின்னணியில் கொலை நடந்ததா என்ற கோணத்தில், சாத்தனுார் போலீசார் விசாரிக்கின்றனர். கனகபுரா துணை முதல்வர் சிவகுமாரின் சொந்த தொகுதி ஆகும். துணை முதல்வர் தொகுதியிலேயே, காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

