sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் 'சஸ்பெண்ட்'

/

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் 'சஸ்பெண்ட்'

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் 'சஸ்பெண்ட்'

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 24, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: பெண் அதிகாரியை ஆபாசமாக பேசிய, காங்கிரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.

சிக்கபல்லாபூரின் சித்லகட்டாவை சேர்ந்தவர் ராஜிவ் கவுடா; காங்கிரஸ் பிரமுகர். சித்லகட்டா நகரில் கட்டப்பட்டிருந்த பேனரை அகற்றிய விவகாரத்தில், நகராட்சி கமிஷனர் அம்ருதா கவுடாவை, ராஜிவ் கவுடா மொபைல் போனில் ஆபாசமாக திட்டியதுடன், உயிருடன் எரிப்பதாகவும் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக உள்ள ராஜிவ் கவுடா, முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் உள்ளார்.

அத்துடன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.

அம்ருதாவை, ராஜிவ் ஆபாசமாக திட்டியது கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாக, காங்கிரசின் சில தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ராஜிவ் மீது நடவடிக்கை எடுக்க கட்சிக்குள்ளேயே கோரிக்கை வலுத்தது. கட்சியின் ஒழுங்கு குழு தலைவர் ரகுமான் கானுக்கு, காங்கிரஸ் செயலர் தலைவர் சந்திரசேகரும் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், ராஜிவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ரகுமான் கான் நேற்று உத்தரவு பிறப்பித்தார். எத்தனை நாட்கள் சஸ்பெண்ட் என்பது தொடர்பாக உத்தரவில் எந்த தகவலும் இல்லை.






      Dinamalar
      Follow us