தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சித்து வீடியோ விவகாரத்தில் காங்., தலைவர்களுக்கு தொடர்பு?

சித்து வீடியோ விவகாரத்தில் காங்., தலைவர்களுக்கு தொடர்பு?

சித்து வீடியோ விவகாரத்தில் காங்., தலைவர்களுக்கு தொடர்பு?


UPDATED : அக் 24, 2026 12:00 AM

ADDED : அக் 23, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:00 AM ADDED : அக் 23, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையா பற்றி, பெண் பேசும் வீடியோ வெளியான வழக்கில், கன்னட செய்தி சேனல் எம்.டி.,யிடம், சி.சி.பி., போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா பற்றி, பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியான வழக்கு குறித்து, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

அந்த பெண்ணை பேச வைத்து வீடியோ எடுத்ததில், எனக்கு தொடர்பு உள்ளது என்று, கன்னட செய்தி நிறுவனமான ‘பவர் டிவி’ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷெட்டி கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில், மைசூரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, சி.சி.பி., போலீசார் நேற்று முன்தினம் பெங்களூரு அழைத்து வந்து விசாரித்தனர். பின், அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ராகேஷ் ஷெட்டி முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இதுகுறித்து சித்த ராமையா மைசூரில் நேற்று அளித்த பேட்டி:

எனக்கு எதிரான வீடியோ எடுத்து, என்னை மிரட்ட சதி நடந்தது. உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக, நானே நேரில் சென்று போலீசில் புகார் அளித்தேன்.

தவறான தகவல் மக்களிடம் செல்ல கூடாது என்பதால், வீடியோ பரவுவதை தடுக்க, நீதிமன்றத்தில் இருந்து தடையாணை வாங்கி வந்தேன். நான் 8 ஆண்டுகள் முதல்வராக இருந்த போது, இதுபோன்று எதுவும் நடக்கவில்லை.

எனக்கு எதிராக வீடியோ எடுத்த ராகேஷ் ஷெட்டி உட்பட இருவரிடம், போலீசார் விசாரித்துள்ளனர். எனது பிரச்னையை நானே பார்த்து கொள்கிறேன். எனக்கு ஆதரவாக யாரும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சித்தராமையா மகனும், அமைச்சருமான யதீந்திரா கூறுகையில், ‘‘ என் அப்பாவுக்கு எதிராக வீடியோவில் பேசிய பெண், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். 2023 தேர்தலில் புத்துார் தொகுதியில் ‘சீட்’ எதிர்பார்த்தார். சீட் பெறவே இதுபோன்ற வீடியோ எடுத்துள்ளார்.

‘‘இதில் எங்கள் கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. விசாரணையில் அனைத்து உண்மையும் வெளிவரும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us