தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெலகாவியில் நவ., 1ல் போராட்டம் திட்டமிட்டவர்கள் சிறையில் அடைப்பு

பெலகாவியில் நவ., 1ல் போராட்டம் திட்டமிட்டவர்கள் சிறையில் அடைப்பு

பெலகாவியில் நவ., 1ல் போராட்டம் திட்டமிட்டவர்கள் சிறையில் அடைப்பு


UPDATED : அக் 24, 2026 12:00 AM

ADDED : அக் 23, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:00 AM ADDED : அக் 23, 2026 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: கர்நாடகாவில் ஆண்டுதோறும் ந வம்பர் 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்படுவது வழக்கம். இது, கர்நாடக மாநிலம் உருவான தினத்தை கொண்டாடும் விழாவாகும்.

அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். ஆனால், பெலகாவி மாவட்டத்தில் மட்டும், எப்போதுமே போராட்டம், கலவரம் வெடிக்கும். இதற்கு, எம்.இ.எஸ்., எனும் மராத்திய அமைப்பினரே காரணம்.

இவர்கள், பெலகாவி மாவட்டத்தை மஹாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என ஆண்டுதோறும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் நவம்பர் 1ம் தேதி ஈடுபடுவார்கள்.

இதனால் கன்னட அமைப்பினர்களுக்கும், மராத்திய அமைப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்படுவது வழக்கம். இதை தடுக்கும் வகையில், பெலகாவி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கின்றனர்.

இவ்வகையில், எம்.இ.எஸ்., அமைப்பின் முக்கிய தலைவர்களான சுபம் ஷெல்கே, மனோஹர் அப்பாஜி ஹுன்ட்ரே ஆகிய இருவரையும், காதேபசார் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது காரணத்தை, போலீசார் தெரிவிக்க வேண்டுமென மராத்திய அமைப்பினர் கூறினர்.

போலீசார் கூறியதாவது:

காதேபசார் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பரில் மராத்திய அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது, சுபம், மனோகர் ஆகிய இருவரும் எஸ்.சி., – எஸ்.டி., சமுதாயத்தினரை இழிவாக பேசினர். இது குறித்து, காதேபசார் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செ ய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைக்கு இருவரையும் நேரில் ஆஜராகுமாறு பலமுறை போலீசார் சம்மன் அனுப்பினர். இருப்பினும், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இவர்களை கைது செய்ய மாவட்ட கூடுதல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us