தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போலந்து பிரதமருக்கு சிவகுமார் அழைப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போலந்து பிரதமருக்கு சிவகுமார் அழைப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போலந்து பிரதமருக்கு சிவகுமார் அழைப்பு


UPDATED : அக் 24, 2026 02:52 AM

ADDED : அக் 23, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 02:52 AM ADDED : அக் 23, 2026 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2027ல் பங்கேற்கும்படி, போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்கிற்கு, கர்நாடக முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்தார்.

அரசு முறை பயணமாக, பெங்களூரு வந்துள்ள போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்கை, முதல்வர் சிவகுமார், பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று சந்தித்தார்.

வணிகம் தொடர்பான சந்திப்பில், மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் ஆகியவற்றில் போலந்து நாட்டின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி , முதலீடு, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க, கர் நாடக அரசு ஆர்வமாக உள்ளதாக, சிவகுமார் கூறினார்.

கோலார் மாவட்டம் வேம்கல் தொழிற்பேட்டையில், 5 ஏக்கரில், 80 கோடி ரூபாய் செலவில் முதலீடு செய்ய, போலந்து நாட்டின் டி.இசட்.எம்.ஓ., குழுமத்தின் முன்மொழிவை வரவேற்றதுடன், இந்த முதலீட்டின் மூலம், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், முதல்வர் பெருமிதத்துடன் கூறினார்.

பெங்களூரு மட்டுமின்றி பிற மாவட்டங்களில் முதலீடு செய்யவும், வர்த்தகம் மற்றும் நிறுவ ரீதியான உறவுகளை வலுப்படுத்தவும், போலந்து பிரதமருக்கு, முதல்வர் அழைப்பு விடுத்தார்.

மேலும், பெங்களூரில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2027ல் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்புக்கு பின், சிவகுமார் அளித்த பேட்டி:

போலந்து நாட்டின் பிரதமர், கர்நாடகாவுக்கு 2வது முறையாக வந்துள்ளார். இது, நமது மாநிலத்தின் தொழில்முனைவோருக்கும், இளம் தலைவர்களுக்கும் பெருமைக்குரிய விஷயம். அரசு சார்பில், போலந்து தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினோம். நமது மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்தேன். அவர்களும் ஆர்வமாக உள்ளனர்.

வெளிநாட்டு தலைவர்கள் நமது மாநிலத்திற்கு வருவதும், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்வதும், நமது மாநிலம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான சான்று.

விண்வெளிக்கு சென்ற இரண்டு வீரர்களில் ஒருவர் போலந்து நாட்டை சேர்ந்தவர். இதற்காக நாங்கள் வாழ்த்து கூறினோம். நாங்கள் தகவல் தொழில்நுட்ப துறை மீது மட்டும் கவனம் செலுத்தவில்லை. செயற்கை நுண்ணறிவு மீதும் கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us