/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார்ப்பரேஷன், வாரியங்களில் பதவி கிடைக்காமல் காங்., பிரமுகர்கள் அதிருப்தி
/
கார்ப்பரேஷன், வாரியங்களில் பதவி கிடைக்காமல் காங்., பிரமுகர்கள் அதிருப்தி
கார்ப்பரேஷன், வாரியங்களில் பதவி கிடைக்காமல் காங்., பிரமுகர்கள் அதிருப்தி
கார்ப்பரேஷன், வாரியங்களில் பதவி கிடைக்காமல் காங்., பிரமுகர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 12, 2025 01:37 AM
பெங்களூரு: முதல்வர் பதவி காலியில்லை என சித்தராமையா கூறினாலும் சித்தராமையா, சிவகுமார் இடையிலான 'பனிப்போரா'ல் கார்ப்பரேஷன், வாரியங்களில் இயக்குநர்கள் நியமனம், மேல்சபையில் நான்கு எம்.எல்.சி.,கள் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்சி பிரமுகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் சமீப நாட்களாக, முதல்வர் நாற்காலியை வைத்து, 'மியூசிகல் சேர்' விளையாட்டு நடக்கிறது. இந்த விளையாட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இழுபறி
கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர், துணைத்தலைவர், இயக்குநர்கள் நியமிப்பதையே ஆட்சியாளர்கள் மறந்துள்ளனர்.
பதவி எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமுகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மேல்சபையில் நான்கு நியமன உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு நான்கு பேரின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டன. ஆனால் சிவகுமார், சித்தராமையாவின் ஆதரவாளர்களால் நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது.
மாநிலத்தின் நுாற்றுக்கும் மேற்பட்ட கார்ப்பரேஷன், வாரியங்களில் 70க்கு மட்டுமே தலைவர், துணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற இடங்கள் காலியாக உள்ளன. எந்த கார்ப்பரேஷன், வாரியங்களுக்கும் உறுப்பினர்கள், இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. கார்ப்பரேஷன், வாரியங்களில் பதவி கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.
கடந்த 2013ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோதும் கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர், துணைத்தலைவர்கள், இயக்குநர்களை நியமிக்காமல் மூன்று ஆண்டுகள் காலியாகவே வைத்திருந்தார். பிரமுகர்களுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவிக் காலம் இருந்தது.
பெரும்பான்மையுடன் காங்கிரஸ் 2023ல் ஆட்சிக்கு வந்தும், சிலருக்கு மட்டுமே கார்ப்பரேஷன், வாரியங்களில் தலைவர் பதவி கிடைத்தது. அதுவும் கூட பெரும்பாலும் எம்.எல்.ஏ.,க்களுக்கே கிடைத்தது.
தொண்டர்கள்
தேர்தலின்போது கட்சிக்காக உழைத்த பிரமுகர்கள், தொண்டர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு, பதவி வழங்க வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் அவ்வப்போது கூறுகிறாரே தவிர, செயல்பாட்டுக்கு வரவில்லை.
கட்சிக்காக உழைப்பது நாங்கள், பதவிக்கு நீங்களா? இன்னும் எத்தனை நாட்கள் பதவி கிடைக்கும் என, நாங்கள் காத்திருப்பது என, காட்டமாக கேள்வி எழுப்புகின்றனர்.