தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பா.ஜ., – எம்.எல்.ஏ., பசவராஜ் ஆதரவாளரை அடிக்க பாய்ந்த காங்கிரஸ் ‘மாஜி’ எம்.எல்.சி.,

பா.ஜ., – எம்.எல்.ஏ., பசவராஜ் ஆதரவாளரை அடிக்க பாய்ந்த காங்கிரஸ் ‘மாஜி’ எம்.எல்.சி.,

பா.ஜ., – எம்.எல்.ஏ., பசவராஜ் ஆதரவாளரை அடிக்க பாய்ந்த காங்கிரஸ் ‘மாஜி’ எம்.எல்.சி.,


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ஆர்.புரம்: அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா முன், பா.ஜ., – எம்.எல்.ஏ., பைரதி பசவராஜின் ஆதரவாளரை, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி., அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு கே.ஆர்.புரம் டின் பேக்டரி பகுதியில் ‘வார்டு 1’ என்ற பெயரில் நேற்று அரசு நிகழ்ச்சி நடந்தது. பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா பங்கேற்றார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலை மோசமாக இருந்ததை பார்த்த அமைச்சர், அதிகாரிகளை அழைத்து கண்டித்தார்.

இந்த நேரத்தில் அமைச்சரின் அருகில் நின்ற, கே.ஆர்.புரம் பா.ஜ., – எம்.எல்.ஏ., பைரதி பசவராஜின் ஆதரவாளர் ஒருவர், ‘இங்கு சாலை சரியாக இல்லாததற்கு அரசு தான் காரணம்’ என்று கூறினார்.

இதனை கேட்டு அமைச்சர் அருகில் நின்ற, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி., நாராயணசாமி கோபம் அடைந்தார். எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளரை அடிக்க பாய்ந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை பார்த்து, ‘நீ சரியாக வேலை செய்யவில்லை. ஆனால் எங்கள் மீது பழியா’ என்று நாராயணசாமி கேட்டார். கோபம் அடைந்த பைரதி பசவராஜ், நாராயணசாமியை பார்த்து ஏதோ சொல்ல, அமைச்சர் இருக்கிறார் என்று கூட பாராமல் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘உன்னை எம்.எல்.சி., ஆக்கியது நான் தான்’ என்று நாராயணசாமியை பார்த்து பைரதி பசவராஜ் கூறினார். பதிலுக்கு நாராயணசாமி, ‘நீ எம்.எல்.ஏ.,வாக நான் தான் காரணம்’ என்றார். இந்த நேரத்தில் இரு கட்சியினருக்கும் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இருவரையும், கிருஷ்ணபைரே கவுடா சமாதானம் செய்தார்.

பைரதி பசவராஜ் கூறுகையில், ‘‘சாலை சரியாக இல்லை என்று யாருமே சொல்ல கூடாதா. அரசை பற்றி குறை சொல்லாமல் வாயை மூடி கொண்டு, அமைதியாகவே இருக்க வேண்டுமா. முன்னாள் எம்.எல்.சி., நாராயணசாமி நடந்து கொண்ட விதம் சரியல்ல,’’ என்றார்.

அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறுகையில், ‘‘அரசியலில் இதுபோன்ற வாக்குவாதங்கள் சாதாரணமானது தான். இதை பெரிதுபடுத்த வேண்டியது இல்லை. இந்த பிரச்னையை இருவரும் இங்கேயே விட்டுவிட வேண்டும். அரசியலை மறந்து வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவோம்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us